கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயமும் ஒன்று. பெண் பக்தர்கள் இருமுடி கட்டிச் சென்று, அம்மனை தரிசித்து செல்வதால், பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும், மாசி மாத திருவிழா விமர்சையாக நடைபெறும். ஆவணி மாதம் அம்மனின் நட்சத்திரமான அஸ்வதி நட்சத்திரம் அன்று, ஆவணி அஸ்வதி பொங்கல் வைபவமும் நடைபெறும். இந்தாண்டுக்கான ஆவணி அஸ்வதி பொங்கால் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண் பக்தர்கள், கலந்து கொண்டு பொங்கலிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.