விஐபிக்கள், நீதிபதிகள் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிப்பாதைகள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கபில் சிபல், 15 நிமிடங்கள் சுங்க சாவடியில் காத்திருப்பதற்கு நீதிபதிகள் வருந்துவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்றங்களில் பல வழக்குகள் தேக்கமடைந்திருந்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், அதை நினைத்து நீதிபதிகள் வருந்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.