நானோ சிம்முக்கு பதிலாக விரைவில் இ-சிம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
செல்போனுக்கு சிம் கார்ட் என்பது உயிர்நாடி என்பது நம் எல்லோருக்கும் தெரியும். பல சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு நேரத்துக்கு ஒரு நம்பரில் தொடர்பு கொள்வது என்பது நம்மில் பலருக்கும் ஒரு பொழுது போக்கு…
இந்த சிம் கார்டுகள் வடிவத்தில் மைக்ரோ, மினி, நானோ சிம் கார்ட் என்று அளவில் குறைந்து கொண்டே வந்துள்ளன. இதன் அடுத்தகட்டமாக தற்போது இ-சிம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த இ-சிம்மை யாரும் பார்க்கவும் முடியாது, தனியாக எடுக்கவும் முடியாது என்பதுதான் இதன் சிறப்பு. ஸ்மார்ட் போன்களுக்குள்ளே சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இ-சிம்களைப் பயன்படுத்தி நமக்கு தேவையான செல்போன் ஆப்ரேட்டர்களை உடனடியாக மாற்றிக் கொள்ளலாம். அதுவும் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமே இதைச்
செய்துவிடலாம் . ஒரு சிம்மை அலுவலக பயன்பாட்டுக்காக, வெறும் டேட்டாவுக்காக பயன்படுத்தவும், மற்றொரு சிம்மை தனிப்பயன்பாட்டுக்காகவும், எஸ்எம்எஸ், தொலைபேசி பயன்பாட்டுக்காகவும் என நமது தேவைக்கேற்ப பயன்படுத்தும் வசதி இந்த இ-சிம்களில் உண்டு.
ஏற்கெனவே ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகளில் இந்த வகையான சிம்கள் உள்ளன. அண்மையில் அறிவிக்கப்பட்ட இரட்டை சிம்கள் கொண்ட ஐ போன்களில் இந்த இ-சிம் தான் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் முதல்முறையாக பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த இ-சிம்கள் விரைவில் இந்தியாவுக்கும் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.