நாட்டையே உலுக்கிய ரிவாரி பலாத்கார வழக்கு – 10 முக்கியத் தகவல்கள்!

நாட்டையே உலுக்கிய ரிவாரி பலாத்கார வழக்கு – 10 முக்கியத் தகவல்கள்!

1) அரியானா மாநிலம் மகேந்தர்கர்க் மாவட்டம் ரிவாரியில் கடந்த 12 ஆம் தேதி சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை படைத்து, பிரதமர், குடியரசுத் தலைவரால் பாராட்டப்பட்ட 19 வயது மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

2) பயிற்சி கூடத்திற்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவிக்கு, பழக்கமான இளைஞர் ஒருவர் குடிநீர் என கூறி மயக்க மருந்து கொடுத்து, மயங்கிய நிலையில் வயல்வெளியில் உள்ள அறைக்கு கொண்டு சென்றார்.

3) கூட்டு பலாத்காரத்தால், மாணவி மயக்கமான நிலையில், மருத்துவர் ஒருவரை அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என மருத்துவரை மிரட்டியுள்ளனர்.

4) பலாத்காரம் நடைபெற்ற பிறகு மாணவி மயக்கமடைந்த நிலையில், அவரை பேருந்து நிலையத்தில் போட்டுவிட்டு, மாணவியின் தந்தைக்கு குற்றவாளி நிஷு போனில் தகவல் சொல்லியுள்ளார்.

5) 3 பேர் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்னும் சிலர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

6) நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை, முதலுதவி அளித்த மருத்துவர், பலாத்காரம் நடைபெற்ற அறையின் உரிமையாளர் என 2 பேரை கைது செய்துள்ளனர்.

7) முக்கிய குற்றவாளிகளான, பங்கஜ், மணிஷ், நிஷு ஆகிய 3 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையில், நிஷுவை ஞாயிற்றுக்கிழமை மாலை போலீசார் கைது செய்தனர். 

8) குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

9) பாதிக்கப்பட்ட மாணவிக்கு முதலமைச்சர் அறிவித்த 2 லட்சம் ரூபாய் நிவாரணத்தை வாங்க, மாணவியின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

10) தக்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். அரியானா மட்டுமின்றி ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரியானா போலீஸ் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Exit mobile version