பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரிப் மீது 3 ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன. இதில் ஒரு வழக்கில், நவாஸ் ஷெரிப், அவரது மகள் மற்றும் அவரது கணவர் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டதால், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நவாஸ் ஷெரிப் மீது மேலும் 2 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகள் மீதான விசாரணையை முடிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், வாரம் ஒருமுறை விசாரணை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், 6 வாரங்களுக்குள் வழக்குகளை விசாரித்து முடிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. இதனால், நவாஸ் ஷெரிப்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
நவாஸ் ஷெரிப்புக்கு நெருக்கடி
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள்
- Tags: 6 வாரங்களுக்குள் முடிக்க உத்தரவுநவாஸ் ஷெரிப்
Related Content
பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் சிறையில் அடைப்பு
By
Web Team
August 1, 2018