ரசாக்குக்கு சொந்தமான இடங்களில், ஊழல் தடுப்பு போலீஸ் நடத்திய சோதனையில், மலேசிய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 273 மில்லியன் டாலர் மதிப்பிலான நகைகள், ரொக்கம் கைப்பற்றப்பட்டன.
அவரது 408 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்த நிலையில், கோலாலம்பூரில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து நஜிப் ரசாக் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, ஊழல் வழக்கு ஒன்றிலிருந்து நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேல் முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தலா 5 லட்சம் ரூபாய்க்கு ஜாமீன் தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.