2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 4 மாநில சட்டமன்ற தேர்தலில் பல்வேறு சீர் திருத்தங்களை கொண்டு வர தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்பேரில் தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. இந்தக் கூட்டத்தில் 7 தேசிய கட்சிகளும் 51 மாநில கட்சிகளும் கலந்துகொள்ள உள்ளன. மின்னணு இயந்திரத்தில் உள்ள நிறைகுறைகள், தேர்தல் ஆணையத்திற்கு கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற தேர்தலில் அதிகளவில் பெண் வாக்காளர்களை பங்குபெறச் செய்வது, கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவை குறைத்து உச்ச வரம்பை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட 8 அம்ச சீர்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் இருந்து அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்குபெற உள்ளன.
தேசிய, மாநில கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: அனைத்து கட்சிகள்ஆலோசனைதேர்தல் ஆணையம்
Related Content
உதயநிதிக்கு 5 மணி வரை கெடு!
By
Web Team
April 7, 2021
துரைமுருகன், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!
By
Web Team
April 5, 2021
நாளை மாலை 7 மணிக்குள் வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்: தேர்தல் ஆணையம்
By
Web Team
April 3, 2021
ஆ.ராசா எம்.பி. பதவி பறிக்கப்படுமா? தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என அறிவிப்பு
By
Web Team
March 29, 2021
மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு தபால் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
By
Web Team
October 5, 2020