தெலுங்கு நடிகை ஹேமாவின் ஆபாச படம் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீ ரெட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி சினிமா வட்டாரத்தை கலக்கி வரும் நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷை கண்டித்தார்.
இப்போது தெலுங்கு நடிகை ஹேமாவுடன் டார்கெட் செய்து இருக்கிறார்.
ஸ்ரீரெட்டியை ஹேமா ஏற்கனவே விமர்சித்து இருந்தார். அவர் கூறும்போது, ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது பார்வைக்கேற்ப நடிகர்-நடிகைகளுக்கு கதைக்கேற்ற கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்” என்று கூறியிருந்தார்.
இதனால் கோபமான ஸ்ரீரெட்டி ஹேமாவை கண்டித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், “ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள் மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள். உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். அமெரிக்க விஷயத்தில் நீங்கள் கருத்து சொன்னால் எனது அதிரடியை நீங்கள் எதிர்பார்க்க வேண்டி இருக்கும்” என்று கூறியுள்ளார். இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.