திருப்பூரில் சந்தன கட்டைகளை கடத்திய கும்பல் சிக்கியது

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட பகுதிகளில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து திருமூர்த்தி மலைப் பகுதியில் வனத்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில் சந்தன கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேங்கன், பழனிச்சாமி, மாரிமுத்து, ரங்கசாமி ஆகியோரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்து 116 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version