திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5ம் தேதி அமைதி பேரணி நடத்த அழகிரி முடிவு செய்துள்ளார். இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை பாஜக களமிறக்குவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தநிலையில், சென்னையில் நடத்த உள்ள பேரணி குறித்து 2 நாட்களாக தனது ஆதரவாளர்களுடன மதுரையில் அழகிரி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரணிக்கு பிறகே தன்னை மக்களை எவ்வாறு தன்னை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது தெரியும் என்றார். தன்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெறவில்லை என்று அழகிரி கூறினார். தனக்கு பதவி மீது ஆசை கிடையாது என்று தெரிவித்த அவர், தாய்க்கழகமான திமுகவில் மீண்டும் சேருவதில் எந்த தவறும் இல்லை என்று குறிப்பிட்டார்.
திமுகவில் சேருவதில் எந்த தவறும் இல்லை – மு.க.அழகிரி
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: அழகிரிதிமுக வெற்றி பெறவில்லை
Related Content
அமைதி பேரணியும்.. அழகிரி அதிருப்தியும்...
By
Web Team
September 5, 2018
கருணாநிதியின் மகனான நான், சொன்னதை செய்வேன் - அழகிரி
By
Web Team
September 2, 2018