இத நம்புறதா வேண்டாமா என்பதை உங்களிடமே விட்டு விடுகிறோம். ஆம். பலத்த மழை காரணமாக பெரு வெள்ளத்தில் மிதந்த கேரளத்தில், தற்போது ஆறுகள், கிணறுகள் திடீரென வறண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘விவசாயிகளின் தோழன்’ என்று அழைக்கப்படும் மண்புழுக்களும் பெருமளவில் காணாமல் போய்விட்டதாம்.
இதுதொடர்பாக ஆய்வு செய்து பிரச்னைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகளை அளிக்குமாறு மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தபோது அதிக அளவு நிலச்சரிவு நேரிட்டது. வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களில் நிலப் பகுதியே மாறிவிட்டது. பல கி.மீ. தொலைவுக்கு நிலத்தில் விரிசல் காணப்படுகிறது.இதுதான் தண்ணீர் குறைந்து, வறட்சி ஏற்படக் காரணமா என ஆராய்ந்து வருகிறார்கள்.