தமிழில் கலக்க வருகிறார் அமிதாப்!

 இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிக்கும் புதிய படம் தமிழிலும் வெளியாக உள்ளது. 75 வயதாகும் அமிதாப்பச்சன் தொடர்ந்து தனக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்து மற்ற இளம் கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

தனுசுடன் இணைந்து ஷமிதாப் என்ற படத்தில் நடித்தார். டாப்சிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய பிங்க் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் நேரடி தமிழ் படத்திலும் நடிக்கிறார்.

தற்போது இந்தியில் ‘தக்ஸ் ஆப் இன்டோஸ்தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு சரித்திர கதையம்சம் உள்ள படமாகும். இப்படத்தில் அமிதாப்பச்சன் ராஜா வேடத்தில் வருகிறார்.

அவரது முதல் தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த படத்தில் அமிதாப்பச்சனுடன் முதல் முதலாக அமீர்கானும் நடிக்கிறார். இப்படம் இந்தியில் வெளியாகும் அதே நாளில் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

 

Exit mobile version