ஓட்டல் ராயல் பிளாசா தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள், அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 30ஆம் தேதி நடந்தது. அப்போது, இந்த வழக்கில், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க, தன்னிடம் பேரம் பேச முயற்சி நடந்ததாக நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். நீதிபதிகளிடம் பேரம் பேசுவதை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது என்று அவர் கூறியுள்ளார். இதனை நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும என நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஆனால், பேரம் எப்படி பேசப்பட்டது? யார் பேசியது போன்ற விவரங்கள் தெரியவிக்கப்படவில்லை.
தன்னிடம் பேரம் பேச முயற்சி – நீதிபதி இந்திரா பானர்ஜி
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: இந்திரா பானர்ஜிபேரம் பேச முயற்சி
Related Content
மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தக் கூடாது: இந்திரா பானர்ஜி
By
Web Team
June 20, 2019