தந்தை இறந்த துக்கம் தாளாமல் தற்கொலை செய்த இளம்பெண்

 

கும்மிடிப்பூண்டியை அடுத்த காரக் காட்டு குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். டாஸ்மாக் ஊழியர். இவருக்கும், சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த கவிதாவுக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதனிடையே கவிதாவின் அப்பா ராஜூ கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். தந்தையின் மரணத்தை கவிதாவால் சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. அடிக்கடி அப்பா எனக்கு அதைசெய்தார்… அப்பா எனக்கு இதைச்செய்தார் என கணவர், குழந்தைகளிடம் பேசிக்கொண்டே இருந்தார். எல்லா தந்தைகளும் பிள்ளைகளுக்கு செய்வது கடமைதானே என கனவர் ராஜ்குமார் சொல்லிப்பார்த்தார். ஆனால் கவிதாவின் மனம் கேட்கவேயில்லை. தந்தையின் பிரிவு கவிதாவை கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைய வைத்தது.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த கவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் போலீசார், கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே கவிதா , தற்கொலைக்கு முன்னர் தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், தனது தந்தை இறந்ததிலிருந்து தான் ஒரு பைத்தியக்காரி போல் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார் . அப்பா இல்லாத வேதனையை தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார். அவரோடு நானும் போக முடிவு எடுத்து விட்டேன் என்றும் யாரோ என்னை கூப்பிடுவது போல இருக்கிறது என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிடுள்ளார்.
கவிதாவின் மரணம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version