தண்ணீர் உறிஞ்சும் தனியார் நிறுவனங்களுக்கு கடிவாளம்.

 

தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை கட்டுப்படுத்தும் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு 14 நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து, குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்யும் 75 நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. நீதிபதி, எஸ்.எம் .சுப்பிரமணியம் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வருங்கால சமுதாயத்துக்கு தேவையான நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என கூறிய நீதிபதி, தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
வரையறுக்கபட்ட அளவை தாண்டி நிலத்தடி நீர் உறிஞ்சபடுகிறதா என்பதை கண்காணிக்க, மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுவை அமைக்கவும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

Exit mobile version