இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுல் 19 ரன்னும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் வெளியேறினர். இதன்பின் ஜோடி சேர்ந்த புஜாராவும், கோலியும் நிதானமாக ஆடினர். புஜாரா சிறப்பாக ஆடி 132 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இங்கிலாந்தை விட இந்திய அணி 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
டெஸ்ட் தொடரில் இந்திய அணி 27 ரன்கள் முன்னிலை
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, உலகம், செய்திகள், விளையாட்டு
- Tags: இந்திய அணி 27 ரன்கள் முன்னிலைமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட்
Related Content
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்- இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள்
By
Web Team
August 2, 2018