ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால், செலவை கட்டுப்படுத்தவும், முதலீட்டை பெறவும் அந்த நிறுவனம், முதல் காலாண்டு அறிக்கை வெளியிடுவதை தள்ளி வைத்திருந்தது. இந்தநிலையில், மார்ச் மாத காலாண்டை தொடர்ந்து, 2வது முறையாக ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டிலும் இந்நிறுவனம் இழப்பை சந்தித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 53 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்று இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டில் ஆயிரத்து 323 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, எரிபொருள் விலை உயர்வு மற்றும் இதர செலவுகளால், இழப்பை சந்தித்துள்ளதாகவும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.