நெல்லை மாவட்ட போலீசார் கருணாஸை கைது செய்ய வந்த நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவிற்கு கருணாஸ் மரியாதை செலுத்த சென்ற போது, தமிழ்நாடு தேவர் பேரவை அமைப்பினரோடு ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக புளியங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக கருணாஸை கைது செய்ய புளியங்குடி டிஎஸ்பி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் அவரது சென்னை விருகம்பாக்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் தேடும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் ஜாமினில் வெளிவந்த கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வரும் போது கைது செய்ய நெல்லை மாவட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கருணாஸ் இன்று காலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.