சென்னையில் வரும் 16ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம்

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று சிறப்பாக கொண்டாப்பட்டது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பல விதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அனுமதி வழங்கப்பட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில், முக்கிய நிகழ்ச்சியான விநாயகர் சிலை ஊர்வலம் சென்னையில் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Exit mobile version