சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சென்னையில் காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு நேரத்தில் குளிர் காற்று வீசியது. அதனைத்தொடர்ந்த, அதிகாலை நேரங்களில் சென்னையின் பல்வேறு இடங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. அதன்படி சென்னையில் தியாகராய நகர், வடபழனி, கோடம்பாக்கம், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
வளிமண்டலத்தில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து பின்னர் வலு இழந்து புயலாக மாறக்கூடும் என்பதால், அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது. மேலும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.