செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன . இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தார்.
144 தடை உத்தரவு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, இயல்பு நிலை திரும்பியது.
இந்த நிலையில் கல்வீச்சு நடைபெற்ற பகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த, கடையநல்லூர் தொகுதி எம்.எல் .ஏ அபுபக்கர் பார்வையிட வந்தார்.
அப்போது அங்கு கூடிய பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு நேற்று வராமல் இன்று வந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். அவர்களை எம்.எல்.ஏ அபுபக்கர் சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனால் மக்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.