சூறையாட நினைப்பதா? – பாலஸ்தீன அதிபர் ஆவேசம்

 

பாலஸ்தீனத்தை சூறையாட நினைக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எண்ணம் நிறைவேறாது என ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் முகமது அப்பாஸ் கூறியுள்ளார்.

எந்த நாட்டின் சட்டத் திட்டங்களையும் மதிக்காமல் இஸ்ரேல் மனம்போன போக்கில் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் கூட்டத்தில் அவர் முன்வைத்தார்.

டிரம்ப் தரும் ஆதரவால் இனவாத செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல், ஐ.நா.வின் எந்த ஒரு விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதில்லை என்றார் அவர். அமைதி முயற்சியில் இனிமேலும் அமெரிக்க மத்தியஸ்தம் செய்யும் நாடாகவும், தங்களின் நண்பனாகவும் இருக்க முடியாது என்று அதிபர் முகமது அப்பாஸ் கூறினார்.

பாலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா முயற்சியில் நடக்கும் நலத்திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்போவதில்லை என ட்ரம்ப் நிர்வாகம் மிரட்டுவதாக அவர் தெரிவித்தார். பாலஸ்தீனம் விற்பனைக்கு அல்ல, தாங்கள் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியமும் இல்லை என்று குறிப்பிட்ட பாலஸ்தீன அதிபர், உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகளை மேற்கொள்வோம் என்றார்.

Exit mobile version