சீன பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிக்க முடிவு – ட்ரம்ப் அதிரடி

சீன பொருட்களுக்கு கூடுதலாக 14 லட்சம் கோடி ரூபாய் வரி விதிக்கும் முக்கிய அறிவிப்பை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிடுகிறார்.

உலகின் பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு வர்த்தக போராக மாறியுள்ளது.

இந்தநிலையில், சீனாவால் ஏற்படும் வர்த்தக பற்றாக்குறையை சரி செய்வதற்காக, அங்கிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரியை அமெரிக்கா விதித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க பொருட்கள் மீது சீனா வரி விதிப்பை பல மடங்கு உயர்த்தி உள்ளது.

இந்த நிலையில், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அதிரடி அறிவிப்பை அதிபர் டிரம்ப் இன்று வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இது இந்திய ரூபாயின் மதிப்பில் 14 லட்சம் கோடி ரூபாயாகும். அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால், இரு நாடுகளிடையேயான வர்த்தக போர் மேலும் தீவிரம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version