சீன ஓபன் பேட்மிட்டன் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, சீனாவின் சென் யுஃபெய்யை எதிர்கொண்டார்.
முதல் செட்டை சீன வீராங்கனையான சென் யுஃபெய் 11-21 என்ற செட் கணக்கில் வென்றதையடுத்து, இரண்டாவது செட்டை பி.வி.சிந்து 21-11 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.
இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் பரபரப்பான மூன்றாவது செட்டில் 21 – 15 என்ற கணக்கில் சீன வீராங்கனையான சென் யுஃபெயிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார் பி.வி.சிந்து.