சீனாவையும் தாக்கியது மங்குட் புயல் – 25 லட்சம் பேர் வெளியேற்றம்

இந்த ஆண்டின் சக்தி வாய்ந்த புயலான மங்குட், 4 நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லூஸான் தீவைக் கடுமையாக தாக்கியது.

இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 66 பேர் பலியாகினர். 40 லட்சம் பேர் உடைமைகளை இழந்துள்ளனர். மங்குட் புயல் சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள குவாங்டாங் (guangdong) மாகாணத்தையும் விட்டுவைக்கவில்லை.

இதனால் சுமார் 52 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து 190 கிலோ மீட்டர் வேகத்தில் ஹாங்காங்கில் பயணித்த மங்குட் புயலின் தாக்கத்தால் 28 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என கூறப்படுகிறது.

வடக்கு நோக்கி நகரும் இப்புயலானது சோங்கிங்,யுன்னான் மாகாணங்களிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

 

Exit mobile version