சர்ஜிக்கல் தாக்குதல் வீடியோ வெளியீடு

2016ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி நள்ளிரவு தொடங்கி 29ம் தேதி அதிகாலை 4 மணி வரை இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

எல்லைக் கோட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் வரை ஹெலிகாப்டர்கள் மூலம் ஊடுருவிய இந்திய ராணுவத்தினர், குறிப்பிட்ட இலக்கில் இறங்கி, துல்லியத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் தீவிரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏழு முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தான் இதனை திட்டவட்டமாக மறுத்து வந்தது. எதிர்க்கட்சிகளும் தாக்குதல் நடத்தப்படவில்லை என கூறிவந்த நிலையில், தாக்குதலின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டது.

இதனையும் பாகிஸ்தான் ஏற்கவில்லை. சர்ஜிக்கல் தாக்குதல் நடந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், 2வது வீடியோவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சுமார் 44 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் ஏவுகணைகள் ஏவ அமைக்கப்பட்ட தளத்தை அழிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Exit mobile version