சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளிக்க முடியாது என உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகளில் பெண் நீதிபதி தனி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இடம் பெற்று இருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளார். சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
உள்ளார்ந்த மத நம்பிக்கைகளை ஆராய வேண்டும் எனவும், பெண்களுக்கு கோவிலில் வழிபட, இந்து மதத்தை பின்பற்ற உரிமை உள்ளதாக நீதிபதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோயில் விவகாரம் என்பது இந்து மத நம்பிக்கை தொடர்பானது எனவும், இதற்கும் பெண்கள் வழிபாட்டு முறைக்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், வயது பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பதே சரியானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.