சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியுள்ளது.
இதனிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடிகை திரிஷா, மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் வரவேற்றுள்ளனர். இருவரும் நடித்துள்ள ‘96’ படத்தின் நிகழ்ச்சியில் இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நல்ல தீர்ப்பு. பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
விஜய்சேதுபதி கூறும் போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் என்றும் பெண்கள் புனிதமானவர்கள் என்றும் தெரிவித்தார். தனது வாழ்க்கையில் அம்மா, மனைவி, மகள், தங்கை என பாசமுள்ள பெண்கள் இருக்கிறார்கள் எனவும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார்.