உதகை அருகே பூத்துக் குலுங்கும் அரிய வகை குறிஞ்சி மலர்களை பறிப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபடும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி, எப்பநாடு, சின்னகுன்னூர், கீழ்கோத்தகிரி, கொடநாடு ஆகிய மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்க கூடிய நீலக்குறிஞ்சி மலர்கள் கடந்த சில தினங்களாக பூத்துக் குலுங்குகின்றன. குறிப்பாக, உதகை அருகே உள்ள கல்லட்டி மலை பகுதியில் உள்ள ராமர் மலை முழுவதும் நீலக்குறிஞ்சி மலர் கொத்து கொத்தாக பூத்துள்து.
இதனிடையே, அழிந்து வரும் குறிஞ்சி மலர்களை பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறிஞ்சி மலர்களை பறிப்பவர்கள் மீது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபடும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உதகையில் பூத்துக் குலுங்கும், குறிஞ்சி மலர்களைக் காண வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.