கன்னியாகுமரி அருகே பெற்ற மகளை பலாத்காரம் செய்த, கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் மிக்கேல். இவரது 14 வயது மகள் அப்பகுதியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அம்மாணவிக்கு வயிற்று வலி இருந்ததால் மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் , மாணவியிடம் விசாரித்துள்ளார். அப்போது மாணவி கூறிய தகவல் அதிர வைப்பதாக இருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அம்மாணவியை அவரது தந்தையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அது மட்டுமின்றி இது குறித்து தாயிடம் சொன்னால் தாயை கொலை செய்து விடுவதாக மிரட்டியும் இருக்கிறார். இதனால் பயந்து போன அந்த மாணவி நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அம்மாணவியின் தாயார் புகாரளித்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியின் தந்தை மிக்கேலை கைது செய்தனர். கர்ப்பமாக உள்ள மாணவிக்கு 14 வயதே ஆவதால் போலீசார் மிக கவனமாக இவ்வழக்கை கையாண்டு வருகின்றனர்.