அமெரிக்காவின் நாசா சார்பில் 5 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள கியூரியாசிட்டி விண்கலம் ஏவப்பட்டது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகம் தொடர்பான அறிவியல் உண்மைகளை கண்டறிந்து பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது. இந்நிலையில் அதன் மையக் கணிப்பொறியில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆய்வு பணிகளை கியூரியாசிட்டி நிறுத்தி உள்ளது. கோளாறை கண்டறிந்து சரி செய்ய தனி அமைப்பு ஒன்றை உருவாக்கும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.