காதலில் விழுந்து விட்டேன் – ட்ரம்ப் உற்சாகம்

 

”நானும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் காதலில் விழுந்துவிட்டோம்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபரை சிங்கப்பூரில் ஜூன் 12 ம்தேதி சந்தித்து பேசினார். இதையடுத்து கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை தணிக்கும் விதமாக வடகொரியா தனது அணு ஆயுத தளங்களை அழித்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதிக்கவில்லை.

இந்த நிலையில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், டிரம்பை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்து அதிபருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து கடந்த திங்களன்று நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச்சபை கூட்டத்தின் இடையே டிரம்ப்பும், உன்னும் சந்தித்து பேசினார்கள்.
இந்நிலையில், வெர்ஜினியாவில் குடியரசு கட்சி சார்பாக நடந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது பேசிய டிரம்ப், “நானும், வடகொரிய தலைவரும் காதலில் விழுந்து விட்டோம் என தெரிவித்தார். அவர் எனக்கு அழகான கடிதங்களை எழுதுகிறார் என்றும் அவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை என்றும் ட்ரம்ப் காதல் மொழி பேசி கூட்டத்தினரை அதிரவைத்தார். நாங்கள் இருவரும் 2வது முறையாக சந்தித்து பேசுவதற்கான தனிச்சிறப்பு வாய்ந்த கடிதமும் கடந்த புதன் கிழமை கிடைத்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

Exit mobile version