கலக்கும் எம்.ஜி.ஆர். திரைப்பட டீசர்!

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை, எம்.ஜி.ஆர். என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கும் பணிகள் தொடங்கின. 

எம்.ஜி.ஆரின் இளமைக்கால வாழ்க்கை, நாடக மற்றும் திரைப் பயணம், அரசியல் வாழ்க்கை ஆகியவற்றின் முக்கிய நிகழ்வுகள் படத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர். திரைப்படத்தின் படப்பிடிப்பை கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி வைத்தனர். அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், படத்தின் டீசர் வெளியாகி அதிமுக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version