ஆஸ்திரேலியாவில் கர்ப்பப்பை புற்றுநோய் 2022-ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை பெருமளவில் பாதிக்கும் நோய்களில் கர்ப்பப்பை புற்றுநோயும் ஒன்று. இந்த நோய் எச்.பி.வி. என்ற வைரஸ் தாக்குவதால் ஏற்படுகிறது. இதனால் பத்தில் ஒன்பது பெண்கள் மரணத்தை தழுவுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இது சர்வதேச அளவில் பாதி ஆகும். எனவே இந்த நோயை ஒழிக்க அங்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2007-ம் ஆண்டில் இருந்து கர்ப்பப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் எச்.பி.வி வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு ஊசி, பெண் குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகிறது. இது நல்ல பலனை தந்திருக்கிறது. தற்போது ஒரு லட்சம் பெண்களில் 6 பேர் மட்டுமே கர்ப்பப்பை புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாவாது தெரியவந்துள்ளது. எனவே வருகிற 2022-ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் கர்ப்பப்பை புற்றுநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.