கர்நாடகாவில் தொடரும் கனமழை – கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள்

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால், அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. காலை நிலவரப்படி, மேட்டூர் அணை நீர்மட்டம் 120 புள்ளி இரண்டு 2 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 93 புள்ளி எட்டு இரண்டு 2 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 75 ஆயிரத்து 170 கனஅடியில் இருந்து 80 ஆயிரத்து 291 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடிக்கு மேல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 76 ஆயிரத்து 611 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  16 கண் மதகு வழியாக 60 ஆயிரம் கனஅடி தண்ணீரும், மேட்டூர் அணை நீர்மின் நிலையத்தின் வழியாக 15 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாயம் இருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளுக்கு செல்வதையும், செல்பி எடுப்பதையும் மக்கள் தவிர்க்குமாறு நீர்வள ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் எடுக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

 

Exit mobile version