"கணவரை கம்பி எண்ண வைக்க மனைவி ஒரு புகார் அளித்தால் போதும்"

கணவன் மீது மனைவி வரதட்சணை புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யும் சட்டம் முன்னர் அமலில் இருந்தது. இதற்கு சட்டப்பிரிவு 498 A வழிவகை செய்தது. இந்தச் சட்டம் ஆண்களுக்கு எதிராக இருந்ததாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் மாவட்டம் தோறும் குடும்ப நல கமிட்டிகள் உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. வரதட்சணை புகார்களை இந்த கமிட்டி விசாரித்து, அறிக்கை அளிக்க வேண்டும்.

அதற்கு பிறகே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய முடியும். இந்நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. வரதட்சணை புகார் அளித்தாலே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யலாம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் முன்ஜாமீன் பெறவும் வழிவகை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version