கடனை திருப்பிச் செலுத்துகிறேன் – விஜய் மல்லையா தகவல்!

இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணைக்காக, விஜய் மல்லையா லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.  தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் இருந்து 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவானார்.

லண்டனில் தஞ்சம் புகுந்திருக்கும் மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. அவரை இந்தியா கொண்டுவர லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விஜய் மல்லையா இன்று ஆஜரானார். மும்பை ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவை அடைப்பது தொடர்பான வீடியோவை நீதிபதி ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த மல்லையா, கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளதாகவும், இதனை நீதிமன்றம் ஆலோசிக்கும் என நம்புவதாகவும், நாடு கடத்துவது குறித்து முன்கூட்டியே எதுவும் கூற விரும்பவில்லை எனவும் கூறினார்.

Exit mobile version