கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு மீண்டும் மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே, மெயின் அருவில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.