ஐதராபாத்தில், 2007ஆம் ஆண்டு, இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 42 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், தாக்குதலில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கடந்த மாதம் 27ஆம் தேதி வாதங்கள் நிறைவுபெற்றது. நீதிபதி ஸ்ரீனிவாச ராவ் இன்று தீர்ப்பினை வழங்கியுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் இஸ்மாயில் சௌத்ரி, அனிக் சவுத்ரி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஃபரூக் ஷஃப்ருதீன், முகமது சாதிக். தாரிக் அன்ஜும் ஆகிய மூன்று பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் இருவருக்குமான தண்டனை விவரங்கள் திங்கள் கிழமை அறிவிக்கப்பட உள்ளது.