எனது உடல் எடை கூடினால் உங்களுக்கென்ன ? நடிகை நித்யா மேனன் காட்டம்

 

தனது உடல் எடையை பற்றி விமர்சித்தவர்களுக்கு நடிகை நித்யா மேனன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள படவுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். சமீபகாலமாக நித்யா மேனன் உடல் எடை கூடி குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. சமூக வலை தளங்களிலும் அவரது உடல் எடை குறித்து குறையாக பேசி வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு நித்யா மேனன் சூடாக பதில் அளித்துள்ளார்.

‘‘எனது உடல் எடை பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதற்கு நான் பதில் சொன்னாலும் சொல்லாமல் இருந்தாலும் விமர்சிப்பவர்கள் எனக்கு எதிராக பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். எனது உடல் எடை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. அதுபற்றி நானே கவலைப்படாதபோது மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது. அவர்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சினிமாவில் நடிப்புதான் முக்கியம், உடல் எடை முக்கியம் இல்லை. உடல் எடையை குறைத்தால்தான் படங்களில் நடிக்க முடியும் என்று யாராவது விரும்பினால் அந்த படங்கள் எனக்கு தேவை இல்லை.’’ என்று சீற்றத்துடன் அவர்களுக்கு பதிலளித்துள்ளார் நித்யா மேனன்.

Exit mobile version