உள்நாட்டு விமான போக்குவரத்தில் புதிய சாதனை!

இந்தியாவின் உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து புதிய சாதனையை படைத்துள்ளது. இந்திய விமான போக்குவரத்து ஆணையரகம் விமானசேவை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஒரு கோடியே 13 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இதே ஆகஸ்ட் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 96 லட்சமாக இருந்தது. தற்போது அது 17 சதவிதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெல்லியை அடுத்த குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இதில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இருக்கைகள் விரைவில் நிரம்புவது, காலந்தவறாமை ஆகிய இரண்டு அம்சங்களில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மேலோங்கி இருப்பதாகவும் அந்த பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் இண்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்கள் உள்ளன. மூன்றாவது இடத்தில் விஸ்தாரா விமான நிறுவனம், 4-வது இடத்தில் ஜெட் ஏர்வேஸ் இடம்பெற்றுள்ளன. அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version