உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரன்ஜன் கோகாய்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா, அக்டோபர் 2ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்தநிலையில், அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்யுமாறு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு, மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பி இருந்தது. இதனையடுத்து, மூத்த நீதிபதி ரன்ஜன் கோகாய் பெயரை, தீபக் மிஸ்ரா பரிந்துரைத்துள்ளார். இதனால், அக்டோபர் 3ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரன்ஜன் கோகாய் பதவியேற்க உள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த ரன்ஜன் கோகாய், 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முக்கிய வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக சில மாதங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டு வைத்த 4 நீதிபதிகளில் ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version