மலேசியாவின் முன்னோடி எழுத்தாளர்களுடன் இளம்தலைமுறை எழுத்தாளர் ம.நவீன் மேற்கொண்ட நேர்காணல்கள் மீண்டு நிலைத்த நிழல்கள் என்ற புத்தகம், ம.நவீன் எழுதிய போயாக் என்ற சிறுகதை தொகுப்பு, உலக சினிமாக்கள் குறித்து சரவண தீர்த்தா எழுதிய ஊதா நிற தேவதைகள் ஆகிய மூன்று நூல்கள் அறிமுகம் நடைபெற்றது. விழாவில் தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் ஜெயமோகன், ரசனை அடிப்படையில் நூல்களை பட்டியலிட வேண்டியது அவசியம் என்றார். தமிழ் இலக்கிய பரப்பில், அதுபோன்ற பட்டியலை 1960-களில் க.நா.சு. வெளியிட்டதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் தான் எழுதிய தமிழ் இலக்கிய நாவல் அறிமுகம் என்ற நூல் ஏற்படுத்திய அதிர்வலைகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். ரசனை அடிப்படையில் எழுத்துக்களை வகைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் ஜெயமோகன் கூறினார். விழாவினை யாவரும் பதிப்பகத்தின் ஜீவ கரிகாலன், வல்லினம் பதிப்பகத்தின் ம.நவீன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். எழுத்தாளர்கள் சு.வேணுகோபால், கவிதைக்காரன் இளங்கோ உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
இலக்கிய ரசனை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்
-
By Web Team

- Categories: இலக்கியம்
- Tags: எழுத்தாளர்ஜெயமோகன்
Related Content

விதைக்கப்பட்ட புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி பிறந்த தினம் இன்று
By
Web Team
May 30, 2021

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் மறைந்தார்!
By
Web Team
May 18, 2021

எழுத்தாளர் பெ.சு.மணி காலமானார்!
By
Web Team
April 27, 2021

எழுத்தாளர் சோ. தர்மனுக்கு முதலமைச்சர் வாழ்த்து
By
Web Team
December 19, 2019

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் தகனம்
By
Web Team
December 23, 2018