கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. காலிறுதி சுற்றுகள் இன்று தொடங்கவுள்ளன. இந்தநிலையில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடால் (rafael nadal) ஜார்ஜியாவின் நிக்கோலஸ் பசிலாஷ்விலியை (nikoloz basilashvili) எதிர்கொள்கிறார். இரவு 8.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் (kevin anderson) ஆஸ்திரியாவைச் சேர்ந்த டோமினிக் தீமை (dominic thiem) சந்திக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் (serena williams) ஈஸ்டோனியாவை (estonia) சேர்ந்த கையா கனேபியை(kaia kanepi) எதிர்கொள்கிறார். இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்க உள்ளது.
இன்று அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதி சுற்றுகள் தொடக்கம்
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள், விளையாட்டு
- Tags: அமெரிக்க ஓபன் டென்னிஸ்காலிறுதி சுற்றுகள்ரஃபேல் நடால்
Related Content
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஃபெடரர், செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
By
Web Team
September 2, 2019
அமெரிக்க ஓபன் டென்னிசில் ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்ளும் இந்திய வீரர்
By
Web Team
August 25, 2019
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : இறுதி போட்டியில் ஜோகோவிச் - நடால்
By
Web Team
January 27, 2019
ஆஸ்திரேலிய ஓபன்: நவோமி ஒசக்கா சாம்பியன் பட்டம் வென்றார்
By
Web Team
January 26, 2019
ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதியில் ரஃபேல் நடால்
By
Web Team
January 20, 2019