சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியுள்ளன.இந்நிலையில் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.அதன்படி பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்லூரி மாணவர்கள் வளாகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாடங்களை படிக்கும் முறை ஆகியவை குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளதாகவும்,சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ‘ராக்கிங்’ செய்யாமல் தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.