இந்திய திருடர்களின் கமாண்டர் – ராகுல் டிவீட்டால் சர்ச்சை

பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று உள்ளது என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக, காங்கிரஸ் இடையே வார்த்தைப்போர் அதிகரித்துள்ளது.

காங்கிரஸுக்கு ஒரு போஃபர்ஸ் என்றால், மோடிக்கு ரஃபேல் என நெட்டிசன்களும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலாந்தே, 21-ம் தேதி அந்நாட்டு இணைய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியை ராகுல் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், சேவை வழங்கும் நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரைத்தது, டசால்ட் நிறுவனம் அம்பானியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

எங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. எங்களுக்காக தேர்வுசெய்யப்பட்ட மத்தியஸ்தரை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இதுதான் முரண்பாடுக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனை பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, வீடியோவுக்கு, இந்திய திருடர்கள் தலைவனைப் பற்றிய கசப்பான உண்மை என தலைப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியைத்தான் ராகுல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.

Exit mobile version