இந்தியா – பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து – ஏமாற்றம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு குறித்து இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐநா சபை பொது கூட்டத்தில்,இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்து பேசவும், அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், எல்லையில் பாகிஸ்தானின் தொடர் அத்துமீறம் மற்றும் தாக்குதலினால் பேச்சு வார்த்தையை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்தது.

இது குறித்து மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், இம்ரான் கானின் உண்மை முகம் வெளிப்பட்டதாகவும், இந்தியாவின் நம்பிக்கையை பாகிஸ்தான் ஒருபோதும் காப்பாற்றவில்லை என்றும் தெரிவித்தார்.இதனையடுத்து, தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்த இம்ரான் கான், இந்தியாவின் முரட்டுத்தனமான மற்றும் எதிர்மறையான பதில்களால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், இதனால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

Exit mobile version