இண்டர்போல் தலைவர் கைது – சீனா அதிரடி

 

இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில் அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள லயோன் நகரில் வசித்து வந்த அவர் செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை. இதுதொடர்பாக அவரது மனைவி புகார் அளித்தார். இதனை இண்டர்போல் விசாரணை செய்து வருகிறது. இந்தநிலையில் அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெங்க் ஹாங்வே கடந்த மாதம் சீனா சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரை சீன போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.மெங் ஹாங்வே சீனாவைச் சேர்ந்தவர். அந்நாட்டின் துணை அமைச்சராக ஏற்கெனவே பதவி வகித்தவர். இந்த நிலையில் தான் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இண்டர்போல் அதிகாரிகள் சீன அரசை தொடர்பு கொண்டுள்ளனர்.

Exit mobile version