இந்தியர்கள், தொலைக்காட்சியை விடவும் ஆன்லைன் வீடியோக்களையே அதிகம் விரும்புவதாக தெரியவந்துள்ளது.
லைம்லைட் நெட்வொர்க் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியர்கள் ஒவ்வொரு வாரமும் 8 மணி நேரம் 28 நிமிடங்களை ஆன்லைனில் வீடியோ பார்க்க செலவிடுவதாக தெரியவந்துள்ளது. அதே நேரம், ஒரு வாரத்தில் 8 மணி நேரம் 8 நிமிடங்கள் மட்டுமே தொலைக்காட்சியைப் பார்க்கின்றனர்.
ஆன்லைனில் வீடியோ பார்ப்பதில் உலக மக்களின் சராசரியே ஒரு வாரத்துக்கு 6 மணி நேரம் 45 நிமிடம் தான். ஆனால் இந்தியர்கள் அதை விட அதிக நேரம் ஆன்லைனில் வீடியோ பார்க்கின்றனர்.
ஆன்லைன் மூலம் செய்தி, சினிமா, ஆபாச வீடியோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை இந்தியர்கள் அதிகமாக பார்ப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.