“ஆந்த்ராக்ஸ் நோய் பீதி வேண்டாம்” – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

நெல்லை மாவட்டத்தில் ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பு பணியில் 5 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி 80 க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்ததாக தகவல் வெளியானது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஒருவர் வைத்திருந்த 18 ஆடுகள் இறந்து இருப்பது தெரிய வந்தது. இறந்த ஆடுகள் அனைத்தும் புதைக்கப்பட்டுவிட்டது.

கால்நடைத் துறையின் இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குநர் தலைமையில் ஐந்து குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டு உள்ளன. களக்காடு சுற்றுவட்டாரத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அந்த குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஆந்த்ராக்ஸ் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version